செந்தில் பாலாஜி குறித்து அவதூறு ட்வீட் – சவுக்கு சங்கருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்

சவுக்கு சங்கர் தன்னைப் பற்றி தொடர்ச்சியாக அவதூறான கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும், தனக்கு மான நஷ்ட ஈடாக ரூ.2 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜி குறித்து அவதூறான கருத்துக்களை பதிவு செய்வதற்கு சவுக்கு சங்கருக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி சவுக்கு சங்கர் அவதூறு கருத்துக்களை பரப்பி வந்துள்ளார். இதையடுத்து சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி தர்ப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இனி கருத்துக்களை பதிவிடும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி செந்தில் பாலாஜிக்கு எதிராக கருத்து தெரிவிக்க சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டார்.

RELATED ARTICLES

Recent News