செல்போன் எண்ணிற்கு வந்த Message.. SBI வங்கி ஊழியரே செய்த பலே மோசடி.. வாடிக்கையாளர்கள் உஷார்..

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் தென்னரசு. இவர், கிரெடிட் கார்டு மூலம் 1.50 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக, அவரது செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். அதில், தென்னரசின், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை திருடி, எஸ்.பி.ஐ வங்கி ஊழியர் அபூபக்கர் சித்திக் வங்கியில் கடன் வாங்கியது தெரியவந்துள்ளது.

இதேபோல, பல்வேறு வாடிக்கையாளர்களின் ஆவணங்களை திருடி, சித்திக் கடன் பெற்றிருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர், சிறையில் அடைத்துள்ளனர்.