“இவ்வாறு உத்தரவிட முடியாது” – கன்வார் யாத்திரை..! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில், கன்வார் யாத்திரை என்ற மிகப்பெரிய திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த திருவிழாவின்போது, பல்வேறு பக்தர்கள் கங்கை ஆற்றுக்கு வந்து, புனித நீரை எடுத்துக் கொண்டு, மற்ற சிவன் கோவில்களுக்கு தருவது வழக்கம்.

இந்த விழா, பொதுவாக ஜூன் முதல் ஆகஸ்டு மாதத்திற்குள் ஏதாவது ஒரு நாளில் நடக்கும். இந்நிலையில், இந்த திருவிழாவையொட்டி, உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரின் தலைமை காவல்துறை கண்காணிப்பாளர், புதிய அறிவுறுத்தல் ஒன்றை கூறியிருந்தார்.

அதன்படி, கன்வார் யாத்திரை நடக்கும் பகுதிகளில் உள்ள உணவகங்களில், அதன் உரிமையாளர்கள் தங்களது பெயர் என்ன என்பதை, தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

காவல்துறை கண்காணிப்பாளரின் இந்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதுதொடர்பான வழக்கை, உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் SVN பட்டி ஆகியோர் அமர்வு விசாரித்தது.

இந்த விசாரணையின்போது, அதிகாரிகளின் இந்த உத்தரவுக்கு, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், உணவகத்தின் உரிமையாளர்கள் தங்களது பெயர்களை தெரிவிக்க உத்தரவிட முடியாது என்றும், உணவு பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும் என்றால், கேட்டுக்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளது.

தொடர்ந்து, கன்வார் யாத்திரை நடக்கும், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேஷ்-க்கு நோட்டீசும் அனுப்பியுள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கை வரும் ஜூலை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

RELATED ARTICLES

Recent News