மோசடி செய்தவரை மோசடி செஞ்சிட்டேன்.. இளைஞர் செய்த காரியம்.. இணையத்தில் வைரல்..

சைபர் குற்றங்கள் மூலமாக தான், பெரும்பாலான மக்கள் தங்களது பணத்தை இழந்துவிடுகின்றனர். மிகவும் உஷாராக இருக்க வேண்டிய தேவை இருந்தபோதிலும், சிலர் ஆசை வார்த்தைகளுக்கும், சிலருக்கு உதவி செய்ய சென்றும், ஆபத்தில் சிக்கிவிடுகின்றனர்.

ஆனால், தற்போது சமூக வலைதள பயன்பாட்டாளர் ஒருவர், தன்னிடம் மோசடி செய்ய வந்த நபரை, தலை சுற்ற வைத்துள்ளார். அதாவது, பொன்னுசாமி சரவணன் என்ற பேஸ்புக் கணக்கில் இருந்து, இளைஞர் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த மெசேஜில், என்னுடைய நண்பனுக்கு நான் மிகவும் அவசரமாக 10 ஆயிரம் ரூபாய் அனுப்ப வேண்டியுள்ளது. ஆனால், GPAY-ல் இன்றைய தினத்திற்கு அனுப்ப வேண்டிய லிமிட் முடிந்துவிட்டது. அதனால், நீங்கள் பணத்தை நண்பனுக்கு அனுப்புறீங்களா? என்று கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு, “10 ஆயிரம் ரூபாய் ரொம்ப சின்ன Amount தான்.. நான் அனுப்புறதுக்கு முன்னாடி, 10 ரூபாய் எனக்கு அனுப்புங்க.. அதை ரவுண்டு பண்ணி, மீண்டும் உங்களுக்கே அனுப்பி விடுறேன்” என்று சுதாரித்துக் கொண்ட இளைஞர் கூறியுள்ளார்.

இதையடுத்து, மோசடி செய்ய வந்த நபரும், 10 ரூபாயை அனுப்பி இருக்கிறார். அந்த 10 ரூபாய் பணத்தை வாங்கிய இளைஞர், “10 ஆயிரத்தை நாளை காலை அனுப்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதனால் கடுப்பான மோசடிக்காரர், “என்ன ஆச்சு, அனுப்புங்க.. ரொம்ப அவசரம் எனக்கு” என்று தொடர் மெசேஜ்களை அனுப்பியிருக்கிறார். இதையடுத்து, மெசேஜ் செய்த குறும்புக்கார இளைஞர், “பணம் அனுப்பு முடியல.. என்னுடைய லிமிட்டும் முடிஞ்சிடுச்சு.. வேறு எங்கயாவது முயற்சி பண்ணுங்க” என்று கூறியிருக்கிறார்.

இதனால் மீண்டும் கடுப்பான மோசடி செய்ய வந்தவர், “என்ன விளையாடுறீங்களா? உங்களால் உதவி செய்ய முடியாது என்று என்னிடம் நேரடியாகவே சொல்லுங்கள்” என்று காட்டமாக மெசேஜ் அனுப்பினார்.

பின்னர், “நான் என்னோட நண்பரிடம் கேட்டு, உங்களது நண்பருக்கு பணம் அனுப்புகிறேன்.. என் நண்பரின் எண்ணுக்கு 50 ரூபாய் அனுப்புங்கள்” என்று மீண்டும் விளையாடியுள்ளார்.

இறுதியில், அந்த மோசடிக்காரிடம் மெசேஜ் அனுப்புவதை நிறுத்திக் கொண்டுள்ளார். 10 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ய வந்தவரிடம், 60 ரூபாயை இவர் பிடுங்கி, Fun செய்துள்ளார். இந்த சம்பவத்தை பார்க்கும்போது, “எனக்கே விபூதி அடிக்க பாத்தல்ல” என்ற வசனம் நினைவுக்கு வருகிறது.

RELATED ARTICLES

Recent News