அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த பள்ளி மாணவர்கள்!

சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் இருந்து கீழ் கொண்டையார் பகுதிக்கு தினமும் தடம் எண்-120 E மற்றும் 61 E பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் இன்று கீழ் கொண்டையாரில் இருந்து ஆவடி பேருந்து நிலையத்திற்கு தடம் எண்-61 E பேருந்து 60 -க்கும் மேற்பட்ட பயணியருடன் சென்றது. பேருந்தில் ஓட்டுனர் உமாபதி மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் பணியில் இருந்தனர்.

அந்த பேருந்து ஆவடி பேருந்து நிலையம் வந்த போது, பேருந்திலிருந்து இறங்கிய பள்ளி மாணவர்கள் சிலர் அங்கிருந்த கல்லை எடுத்து பேருந்தின் பின் பக்க கண்ணாடியை உடைத்துள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த ஆவடி போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News