புதுச்சேரியில் நாளுக்கு நாள் இன்ஃப்ளுயன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. புதுச்சேரியில் ஏராளமான வெளிநாடு மற்றும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 16ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை 11 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் வழக்கம் போல நடைபெறும்.
ஆண்டு இறுதித் தேர்வு வரவுள்ள நிலையில் பள்ளி மாணவர்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடாது என்ற அடிப்படையில் அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாக புதுச்சேரி கல்வித்துறை தெரிவித்துள்ளது.