தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் ஒன்றரை மாதம் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதற்காக பள்ளி வளாகத்தில் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் பள்ளிகள் தரப்பில் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் இன்றே வழங்கப்பட உள்ளது.

அந்த வகையில் 70 லட்சத்து 67 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படுவதோடு, 60 லட்சத்து 75 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு நோட்டுகளும், 8 லட்சத்து 22 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு புவியியல் வரைபடமும் வழங்கப்பட உள்ளன.

இந்த கல்வியாண்டை உற்சாகமாக தொடங்க உதவும் வகையில், கல்வியாண்டின் முதல் நாளிலேயே இவை வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

மேலும், தமிழக அரசின் சார்பில் புத்தகப்பை, காலணி, மழைக்கோட்டு, சீருடைகள், வண்ண பென்சில் மற்றும் கிரையான்கள், ஜாமின்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளன. மேலும், புதிய இலவச பஸ் பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கனவே உள்ள பழைய அட்டையை பயன்படுத்தி மாணவர்கள் கட்டணமின்றி அரசு பஸ்களில் சீருடையுடன் பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

குறிப்பக இந்த கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் புதிதாக 3 லட்சத்து 31 ஆயிரத்து 162 பேர் சேர்ந்துள்ளனர்.

2024- 25 ஆம் கல்வியாண்டு துவங்கும் இந்த நாளில் மாணவா்களை மகிழ்வோடு இனிப்புகளை வழங்கி வாழ்த்தி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

RELATED ARTICLES

Recent News