தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் டாஸ்மாக் கடை அருகே திமுக கவுன்சிலர் உள்ளிட்ட இருவர் அரிவாளால் வெட்டப்பட்டனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறைச் சேர்ந்தவர் திமுக கவுன்சிலர் கிருபானந்தம், அப்பு என்பவரும் தஞ்சையில் உள்ள டாஸ்மாக் கடை சென்ற போது அங்கிருந்த சிலருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் கவுன்சிலர் கிருபானந்தம் மற்றும் அப்பு ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டனர். அப்பகுதியில் உள்ளவர்கள் காயம் அடைந்த அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கவுன்சிலர் கிருபானந்தம் மற்றும் அப்புவை அரிவாளால் வெட்டிய திருவையாறை சேர்ந்த துளசிராமன், நடேசன், அருண், சதீஸ் ஆகிய நான்குபேரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.