சந்தானம் நடித்திருந்த டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.
ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களையே பெற்ற இந்த திரைப்படம், நாட்கள் செல்ல செல்ல ரசிகர்களின் மனதை கவர்ந்து வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், செகன்ட் ஷோ என்ற Youtube Channel-ல், இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதனை பார்த்த சந்தானத்தின் ஆதரவாளர்கள், அந்த Youtube Channel-ன் உரிமையாளரை, ஆபாசமான வார்த்தைகளை கூறி, மிரட்டியுள்ளார்களாம்.
இதுதொடர்பாக, அந்த சேனலின் உரிமையாளரும், இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சந்தானத்திற்கு தெரிந்து நடந்திருக்குமோ என்ற சந்தேகமும், தற்போது எழுந்துள்ளது.