ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் திருக்கோவிலுக்கு, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த குடும்பத்தினர் 4 பேர் சென்றுள்ளனர். அப்போது, அக்னி தீர்த்த கடற்கரையில் குளித்துவிட்டு, டீ கடை அருகே உள்ள உடை மாற்றும் அறைக்கு சென்றுள்ளனர்.
உள்ளே சென்று உடை மாற்றிக் கொண்டிருந்தபோது, 4 பேரில் ஒருவரான இளம்பெண், அறையில் கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, குடும்பத்தினர் சார்பில், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், உடை மாற்றும் அறையை ஆய்வு செய்தனர்.
அதில், 3 ரகசிய கேமராக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை, காவல்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களது செல்போனில், 120-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.