ஓ மஞ்சு படத்தின் மூலமாகத் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கவிதா. ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவா் தற்போது திரைப்பங்களில் முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். கொரோனா சமயத்தில் அவரது கணவரும் மகனும் இறந்தது அவரை மீழாத் துயரில் ஆழ்த்தியது.
இந்நிலையில் திரையுலகில் தன்னுடைய ஆரம்ப கட்டத்தில் ரஜினியுடன் ரகசிய திருமணம் என்று வெளியான செய்தி குறித்துப் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவா் கூறியதாவது “ரஜினியுடன் பல படங்களில் சேர்ந்து நடித்ததால், ரஜினிக்கும் எனக்கும் ரகசிய கல்யாணம் நடந்து விட்டது என்று ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானது. அப்போது நான் மோகன் பாபுவுடன் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருந்தேன். அப்போது நான் வளர்ந்து வரும் நடிகையாக இருந்ததால் மோகன் பாபுவும் இந்த செய்தி பார்த்து மிகவும் வருத்தப்பட்டார்.
செய்தி வெளியிட்ட பத்திரிகை அலுவலகத்திற்கே சென்று, அந்தப் பொய்யான செய்திக்காக நாங்கள் சண்டை போட்டோம். உடனே, பத்திரிகை தவறை ஏற்றுக்கொண்டு மறுப்பு போடுவதாக சொன்னார்கள். அதற்குள் இந்த செய்தி காட்டுத்தீ போல எங்கள் வீடுவரை சென்று வீட்டில் இருந்து போன் வந்து விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்” என்று கூறியுள்ளார்.இவாின் இத்தகைய பதிலானது
தற்போதைய தலைமுறை மத்தியில் வைரலாக பரவி வருகிறது.