பாஜக மாநில தலைவரை மாற்றக்கோரி செயலாளர் திடீர் போராட்டம்

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டு தோல்வியடைந்தார். எதிர்க்கட்சியில் போட்டியிட்ட வைத்திலிங்கம் வெற்றி பெற்றார். ஆளுங்கட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததால் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் தோல்விக்கு மாநில பாஜக தலைவர் செல்வகணபதி தார்மிக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன் வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில் பாஜக மாநிலச் செயலாளர் ரத்தினவேல் பாஜக தலைமை அலுவலகத்தில் மேல் சட்டை அணியாமல் போராட்டத்தை நடத்தி வருகிறார். அவருக்கு ஆதரவாக சில பாஜக நிர்வாகிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர். பாஜக மாநிலத் தலைவரை மாற்றும் வரை தனது போராட்டம் தொடரும் என ரத்தினவேலு தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News