தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு தி.நகர், ரங்கநாதன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசல் அதிகம் இருக்க கூடிய ரங்கநாதன் தெருவில் 25 புதிய சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் தி.நகர் ரங்கநாதன் தெரு உட்பட 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கபப்ட்டு பைனா குலோர் வழியாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தி நகரில் 2 காவல் உதவி ஆணையர் தலைமையில் 6 காவல் ஆய்வாளர், 10 உதவி காவல் ஆய்வாளர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
100 ஆயுதப்படை காவலர்கள், 100 ஊர்காவல் படையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் தி நகர் ரங்கநாதன் தெருவில் பொது மக்கள் கூட்டத்திற்கு இடையில் ஆய்வு செய்து வருகிறார்.