நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, பிரபல நடிகை ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், “திருமணம் செய்துக் கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டு, தன்னுடன் அவர் உடலுறவு வைத்துக் கொண்டதாக” அந்த புகாரில் அவர் கூறியிருந்தார்.
இந்த புகாரை ஏற்கக் கூடாது என்று, சீமான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை நிராகரித்த நீதிமன்றம், சீமானிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த விவகாரம், தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில், சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “என்னை பாலியல் குற்றவாளி என நீங்கள் எப்படிக் கூறுவீர்கள்” என்றும், “என்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டதா” என்றும், கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “என்னை எதிர்கொள்ள முடியாமல் நடுங்குகின்றனர்” என்றும், “என்னைப் பார்த்து நடுங்குவதால், எனக்கு எதிராக சதி செய்கின்றனர்” என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து, “என் மீது புகார் கொடுத்த நடிகை தான், பாலியல் தொழிலாளி” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதையடுத்து, சீமான் மீது புகார் கொடுத்த அந்த நடிகை, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “நான் பாலியல் தொழிலாளியா? என்னுடைய கண்ணீர் அவரை சும்மா விடாது. சீமான் இனி நன்றாக இருக்க மாட்டார்” என்று கூறியுள்ளார்.