புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும் என்றும், அதனை ஏற்காவிட்டால், கல்வி நிதி ஒதுக்க முடியாது என்றும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இவரது இந்த பேச்சுக்கு, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்கள், தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தர்மேந்திர பிரதானுக்கு, சீமான் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வாத உணவைத் திணித்தால், உடல் எப்படி உமிழ்ந்துவிடுமோ, அதைப் போல ஒவ்வாத இந்தியை திணித்தால், தமிழ் மக்களும் அதை உமிழ்ந்துவிடுவார் என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து, மாணவர்களுக்கான கல்வி நிதியை ஒதுக்காவிட்டால், மத்திய அரசுக்கு வரி செலுத்த முடியாது என்பதை வலியுறுத்தி, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.