Connect with us

Raj News Tamil

விடுதலை படத்தில் இவர்தான் வாத்தியார்-ஆ? ரசிகர்கள் ஷாக்!

சினிமா

விடுதலை படத்தில் இவர்தான் வாத்தியார்-ஆ? ரசிகர்கள் ஷாக்!

விடுதலை 2-ஆம் பாகத்திற்கான பணிகளில், இயக்குநர் வெற்றிமாறன் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படத்தில், வெறும் 8 நாட்களுக்கு மட்டுமே நடிக்க வந்த விஜய்சேதுபதி, தற்போது 100 நாட்களுக்கு மேல் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் வாத்தியார் கதாபாத்திரத்தில், முதலில் நடிக்க இருந்த நடிகர் தொடர்பான தகவல், வைரலாகி வருகிறது.

அதாவது, இப்படத்தில் நடிப்பதற்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை தான், வெற்றிமாறன் முதலில் அணுகியுள்ளாராம்.

ஆனால், அவர் கேட்ட கால்ஷீட்டை வழங்க முடியாததால், சீமான் அப்படத்தில் நடிக்கவில்லை.

ஒருவேளை நடித்திருந்தால், சீமானும் 100 நாட்கள் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். நல்லவேளை, சீமான் கிரேட் எஸ்கேப் ஆகிவிட்டார்.

More in சினிமா

To Top