தம்பி விஜய்க்கு இப்படியொரு நிலையா?

நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னரிமை வழங்க வேண்டும் என்று தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் அறிவித்தது. இதன்காரணமாக, விஜயின் வாரிசு திரைப்படத்திற்கு, சிக்கல் ஏற்பட்டது.

தற்போது, விஜய்க்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ள சீமான், தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவு கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கே, இந்த முடிவு என்றால், சிறிய பட்ஜெட் தமிழ் படங்களின் நிலை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும். இல்லை என்றால், தெலுங்கு திரைப்படங்களை தமிழகத்தில் வெளியிட விட மாட்டோம் என்றும் சீமான் எச்சரித்துள்ளார்.