நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, பிரபல நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை ரத்து செய்யக்கோரி, உயர்நீதிமன்றத்தில், சீமான் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, சீமான் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகினார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்தார்.
இதுதொடர்பாக விசாரித்த நீதிமன்றம், சீமான் – பிரபல நடிகை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது
பேசிய அவர், “என்னை விமர்சிக்க திமுக, திகவுக்கு தகுதி இல்லை” என்று கூறினார். மேலும், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடையை நான் வரவேற்கிறேன் என்று கூறிய அவர், என் மீது சுமத்தப்பட்டுள்ளது பொய் குற்றச்சாட்டு என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய சீமான், அந்த நடிகை, ஒவ்வொரு முறை புகார் கூறும்போதும், மாற்றி மாற்றி பேசுகிறார் என்றும், எனக்கு நடந்த கொடுமை, இனி யாருக்கும் நடக்கக் கூடாது என்றும், தெரிவித்துள்ளார்.