பாஜக என்னை பார்த்து பயப்படுகிறது – சீமான் அதிரடி..!

என்னை பார்த்து காங்கிரசும், பாஜகவும் பயப்படுவதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

வேலுநாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் வேலுநாச்சியாரின் உருவப்படத்திற்கு அக்கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் கலந்து கொண்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலுநாச்சியாரின் உருவப்படத்திற்குமரியாதை செலுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ராகுல் காந்தியின் நடைபயணத்தால் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது என்றும் தமிழ்நாட்டில் தன்னை பார்த்து பாஜகவும், காங்கிரஸும் பயப்படுவதாகவும் தெரிவித்தார்.