பொங்கலுக்கு இலவச அரிசி கொடுப்பது தேசிய இன அவமானம் : சீமான் ஆவேசம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை கொண்ட பரிசுத் தொகுப்பை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் கக்கன் உருவப்படத்துக்கு சீமான் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பொங்கலுக்கு கொடுக்கப்படும் அரசு இலவச அரிசி குறித்து அவர் பேசினார்.

பொங்கலுக்கு அரசு இலவச அரிசி, சர்க்கரை வழங்குவதை தேசிய இன அவமானமாக கருதுகிறேன். விவசாயிகள் தான் விளைவிக்கின்றனர். அவர்களுக்கு ஒரு முழம் கரும்பு கிடையாது. வாரிசுகள் அதிகாரத்திற்கு மட்டும் தான் வருகிறார்கள். ஏன் ஆசிரியர் பணி, ராணுவ துறைக்கு செல்வதில்லை என கேள்வி எழுப்பினார்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியான பிறகு வேறொரு நிலையாக மாறிவிட்டது என அவர் பேசியுள்ளார்.