ராகுல் காந்திக்கு ஆதரவாக பேசிய சீமான்! என்ன சொன்னார் தெரியுமா?

நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுக கட்சியினருக்கும் இடையே, கடந்த 2018-ஆம் ஆண்டு அன்று தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு தொடர்பாக, மதிமுகவினர் காவல்துறையில் புகார் அளித்தனர். அப்போது கைது செய்யப்பட்ட சீமான், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், நேற்று நடைபெற்றது. அப்போது ஆஜரான சீமான், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக, நீதிபதி முன் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.

அப்போது பேசிய அவர், பாஜகவிற்கு எதிரான அணி நாடு முழுவதும் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து, ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டனை குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான், ஒருவர் பிரதமரானால் அவரை விமர்சிக்கவே கூடாதா என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.

மேலும், அரசை விமர்சனம் செய்வது குற்றமில்லை என நீதிமன்றமே கூறியுள்ளது. அப்படி இருக்கையில், ராகுல் காந்திக்கு நீதிமன்றம் ஏன் தண்டனை வழங்கியது. அந்த தீர்ப்பை படிக்கும்போது, எனக்கு சிரிப்பு தான் வருகிறது என்றும் தெதரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News