தூத்துக்குடி மாவட்டம் நாகர்கோவிலில், நாம் தமிழர் கட்சி சார்பில், பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக, அங்கு வந்த தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது குறித்தும், நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்தும், கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், செந்தில் பாலாஜியின் கைது செய்யப்பட்டது மத்திய அரசின் கொடுங்கோல் ஆட்சி முறைக்கு எடுத்துக்காட்டு என்று தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது சினிமா பாணியாக இருப்பினும், அவர் விரைவில் குணமாக வாழ்த்துகிறேன் என்றும் சீமான் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,கைது செய்ய முற்படும்போது, நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதெல்லாம், பல தெலுங்கு படங்களில் பார்த்துவிட்டோம் என்றும், விமர்சித்தார்.