வாரிசு படத்தின் வெளியீட்டிற்கு முன்பு, விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது, அவர் அணிந்திருந்த ஆடை, பல ஆயிரங்களில் விலைக்கு வங்கப்பட்டது என்ற தகவல், சமூக வலைதளங்களில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், நடிகைகள் அணிந்திருக்கும் ஆடைகளின் விலையை கண்டறிந்து, அதனை சர்ச்சையாக்குவதை, நெட்டிசன்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், இதேபோன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அணிந்திருந்த டீ – சார்ட்டின் விலை, இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஒரு டீ சார்ட்டின் விலை, ரூபாய் 40 ஆயிரம் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும், தங்க சங்கிலியை அவர் அணிந்திருப்பதையும், அவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
