கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சீனு ராமசாமி.
இந்த படத்திற்கு பிறகு, தென்மேற்கு பருவக் காற்று, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை எடுத்திருந்தார்.
இந்நிலையில், இவரது அடுத்த படத்திற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின்படி, கோழிப் பண்ணை செல்லதுரை என்று அந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
ஏகன் என்பவர் தான் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை டாக்டர் அருள் நந்து என்பவர் தயாரிக்க உள்ளார்.
