துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ‘சீதா ராமம்’. காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் 14வது இந்திய திரைப்பட விழா நடைபெற்றது. அதில், ‘சீதா ராமம்’ சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றுள்ளது. இந்த விருதினை படத்தின் இயக்குனர் ஹனுராகவ புடி பெருமையுடன் வாங்கியுள்ளார்.
சீதா மற்றும் ராமின் ரசிகர்கள் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.