பழங்குடியினர் சாதிச் சான்றுக்காக தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டவரின் குடும்பத்தினர், தங்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன், தனது பையனுக்கு பழங்குடியினர் சாதிச்சான்று வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் மனு கொடுத்தார்.
ஆனால், அதிகாரிகள் சாதிச்சான்று வழங்காமல் அலைக்கழித்ததால், மன உளைச்சலுக்கு ஆளான அவர், 2 நாட்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட வேல்முருகன் குடும்பத்திற்கு நீதியும், நிவாரணமும் வழங்க வேண்டும் என, பல்வேறு அமைப்பினர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
அவர்களுக்கு அனுமதி மறுத்த போலீஸார், பாதிக்கப்பட்ட வேல்முருகனின் குடும்பத்தினர் மட்டும், ஆட்சியரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதனிடையே, இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாசரணைக்கு வந்தது.
அப்போது, வேல்முருகன் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் இல்லை என்பதால், அவருக்கு பழங்குடியினர் பிரிவில் சான்று வழங்கவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதனை வனவேங்கைகள் கட்சி நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.