அதிகாலையிலே கூடுதல் விலைக்கு மதுவிற்பனை: 3 பேர் கைது!

ஆத்தூர் பகுதிகளில் அதிகாலையிலே மதுபாட்டிகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்து 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்ட ஆத்தூர் நகர பகுதிகளில் அதிகாலை முதலே சந்து கடைகளில் அரசு டாஸ்டாக் மதுபாட்டில்களை சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்ந்து புகார் சென்றது.

அதன்பேரில் போலீசார் தனிபடை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மந்தைவெளி சிகாரப்பேட்டை பகுதியில் சந்துக் கடையில் சட்ட விரோதமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த வெங்கடேஷ் (35) என்பவரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதே போல் கொல்லம்பட்டறை பகுதியில் மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த கல்லாநத்தத்தை சேர்ந்த ராமலிங்கம் (40) மற்றும் அம்பேத்கர் காலனியில் வீட்டில் மதுபாட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த ஜீவா உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 150 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News