ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகை அன்று, பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு, ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படுவது குறித்து, எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில், 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.
மேலும், திமுக எதிர்கட்சியாக இருந்தபோது, பொங்கல் பரிசாக 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், அதை கணக்கில் வைத்து பார்த்தால், தற்போதைய மதிப்பின்படி, 30 ஆயிரம் ரூபாயை, திமுக அரசு தற்போது பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்க வேண்டும் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.