தமிழ் சினிமாவின் ஜீனியஸ் இயக்குநர் என்று அழைக்கப்படுபவர் செல்வராகவன். இவர், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற பல்வேறு தரமான படங்களை இயக்கியிருக்கிறார். ஆனால், கடந்த சில வருடங்களாக, அவர் இயக்கும் எந்தவொரு திரைப்படமும், பெரிய வெற்றியை பெறாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், ஜி.வி.பிரகாஷை வைத்து, மெண்டல் மனதில் என்ற படத்தை, அவர் தற்போது இயக்க உள்ளார். இது, காதலை மையமாக வைத்து உருவாக உள்ளது.
இதற்கு முன்னர், காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் ஆகிய திரைப்படங்களில், காதலின் மேன்மையை செல்வராகவன் பேசியிருந்தார். இந்த படங்களுக்கு பிறகு, தற்போது மீண்டும் இந்த கதைக் களத்தை அவர் கையில் எடுத்திருக்கிறார்.