காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல்வேறு தரமான திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் செல்வராகவன்.
பீஸ்ட் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், தற்போது தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் செல்வராகவன், அவ்வப்போது, பதிவுகள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தன்னுடைய மனைவி குறித்து பேசிய அவர், “நீயில்லாமலும் இருக்க முடியவில்லை.. நீ இருந்தாலும் இருக்க முடியவில்லை.. என்ன பண்றதுனே தெரியல.. ஏன் என்ன திட்டிக்கிட்டே இருக்க..” என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோவின் கீழே கமெண்ட் செய்த செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, “வீட்டுக்கு தான வருவ..” என்று செல்லமாக கோபித்துக் கொண்டுள்ளார்.