செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளவை எட்டும் அபாயம்?

குமரிக்கடல் மற்றும் தமிழக கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645மி.கன அடியில் தற்போது வரை 3115 மி.கனஅடி தண்ணீர் நிரம்பியுள்ளது. ஏரிக்கு வரும் 162 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 21.98 அடிக்கு தண்ணீர் உள்ளது.

மழை நீடித்தால் விரைவில் இதன் முழு கொள்ளவை எட்டிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே எந்நேரமும் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏரியை சுற்றியுள்ள மக்கள், சென்னை மக்கள் என அனைவரும் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News