தமிழக காங்கிரஸில் உட்கட்சி பூசல் வெளிப்படையாக வீதியில் அப்பட்டமாகியுள்ளது. அதாவது கடந்த 15-ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில், நெல்லை மாவட்ட நிர்வாகிகள், தமிழக காங்கிரஸ் அழகிரியை நீக்கமாறு போரட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கட்சியின் மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கமிட்டியன் தலைவர் கார்கேவை சந்தித்தனர். இதையடுத்து தமிழக காங்கிரஸில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.
சத்திய மூர்த்தி பவனில் நடந்த பொதுக்கூட்டத்தில் கேஎஸ்.அழகிரி மற்றும் ரூபி மனோகரன் தரப்பிற்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக ரூபி மனோகரனை நீக்க வேண்டும் என்று 64 மாவட்ட தலைவர்கள் வலியுறுத்திய நிலையில் இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.