சென்னை கொத்தவால்சாவடியில் அமைந்துள்ள வீரபத்திர சுவாமி திருக்கோயிலில் அதே பகுதியை சேர்ந்த 38 வயதான முரளிகிருஷ்ணன் என்ற நபர் மதுபோதையில் பெட்ரோல் குண்டினை வீசியுள்ளார். கோயிலின் உள்ளே இருந்த பூசாரி வெளியே ஓடி வந்ததால் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொத்தவால்சாவடி காவல்துறையினர் முரளிகிருஷ்ணணை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த கோயிலில் வழிபட்டு வருவதாகவும், இந்த கடவுள் தனக்கு திருப்பி எதுவும் செய்யவில்லை என்பதால் கோயிலின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் மது போதையில் கோயிலின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.