Connect with us

Raj News Tamil

செந்தில் பாலாஜி வழக்கு: குற்றச்சாட்டு பதிவு இல்லை!

தமிழகம்

செந்தில் பாலாஜி வழக்கு: குற்றச்சாட்டு பதிவு இல்லை!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இன்று குற்றச்சாட்டு பதிவு இல்லை என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் 2023 ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த  வழக்கில் ஜனவரி 22ம் தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில்,  போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை துவங்க கூடாது என்றும், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.அல்லி முன்பு நடைபெற்ற போது, செந்தில் பாலாஜி சார்பில், மத்திய குற்றப்பிரிவு வழக்கில் செந்தில் பாலாஜி விடுவிக்க்கப்படும் பட்சத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்ததே செல்லாததாகிவிடும் என கூறினார்.

இதற்கு அமலாக்கத் துறை சார்பில், வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பதில் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி எஸ். அல்லி செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார். மேலும், குற்றச்சாட்டுகள் பதிவுக்காக செந்தில் பாலாஜியை இன்று நேரில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டிருந்தார்.

மேலும், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்கக்கோரி மெமோ தாக்கல் செய்வதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் செந்தில் பாலாஜி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மெமோவை பெற்றுக்கொள்வதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த நீதிபதி பின்னர் மெமோவை தற்போது பெற்றுக்கொள்வதாகவும் அதன் மீது பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் நீதிபதி எஸ்.அல்லி கூறினார்.

இதனையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி அல்லி முன்பாக விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இன்று குற்றச்சாட்டு பதிவு இல்லை என்றும், நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக காணொளியில் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

அப்போது, செந்தில்பாலாஜியை விடுவிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக அவர் தரப்பு வழக்கறிஞர் முறையீடு செய்தார்.

அமலாக்கத்துறை தரப்புக்கு மனு நகல் வழங்கப்பட்டதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, காலையிலேயே வழங்கப்பட்டுவிட்டதாக செந்தில் பாலாஜி தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top