சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவரை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி நெஞ்சு வலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜியின் , வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பும் அவருக்கு சாதகமாக அமையவில்லை ,இந்நிலையில் அவரின் மருத்துவ நாட்கள் ,முடிந்த பிறகு காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
அதன்படி, சற்று நேரங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனால் ,அடுத்த கட்டமாக அவர் புழல் சிறைக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேற்படி மருத்துவத்தை அவர் புழல் சிறை மருத்துவமனையில் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.