“கரு கலைஞ்சிடும்-னு நினைக்கிறேன்” – சீரியல் நடிகையை கொடுமைப்படுத்தும் கணவர்!

கேளடி கண்மணி, மகராசி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர், தன்னுடன் சீரியலில் நடித்து வந்த அர்ணவ் என்ற நபருடன், லிவ்விங் டூ கெதர் முறையில், வாழ்ந்து வந்துள்ளார்.

இதையடுத்து, 2 மாத கர்ப்பம் அடைந்த திவ்யா, அர்ணவ்வை சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், நடிகை திவ்யா கண்ணீர் மல்க பேசியுள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “இரண்டு வருடத்திற்கு முன்பு தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நாங்கள் ஒன்றாக நடித்தோம். அதற்குப் பிறகு நாங்க Living Relationship-ல் தான் வாழ்ந்து வந்தோம். பின்னர், நான் கர்ப்பமாக இருந்ததால், இருவரும் திருமணம் செய்துக் கொண்டோம். ஆனால், தற்போது என் கணவர் அடித்து துன்புறுத்துகிறார்.

என் ஹஸ்பண்ட் என்னை அடிச்சதால நான் கீழே விழுந்ததில் என்னுடைய வயிறுக்கு அடிபட்டு இருக்கு. என்னுடைய காலில் அவர் மிதித்ததால் நான் மயங்கி விழுந்துட்டேன்.

கொஞ்ச நேரம் கழிச்சு தான் நான் முழித்து பார்த்தேன். அப்போது அவர் அங்கே இல்லை. என்னால் ஹாஸ்பிடலுக்கு வர முடியவில்லை. வயிறு வலி வந்துடுச்சு. ப்ளீடிங் ஆகிவிட்டது” என்று திவ்யா கதறி அழுத வீடியோ தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.