கர்ப்பத்துடன் திருமணம்.. காதலரை கரம்பிடித்த சீரியல் நடிகை!

கேளடி கண்மணி, மகராசி, செவ்வந்தி, செல்லம்மா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை திவ்யா. இவர், செல்லம்மா என்ற சிரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது, அதே சிரியலில் ஹீரோவாக நடித்து வந்த அர்ணவ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

பின்னர், Living Together என்ற முறைப்படி, திருமணம் செய்துக் கொள்ளாமலேயே இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது, திவ்யா கர்ப்பமாகியுள்ளதால், இருவரும் திடீரென திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.

இந்து மற்றும் இசுலாம் முறைப்படி நடந்துள்ள இவர்களது திருமணம், முறைப்படி பதிவும் செய்யப்பட்டுள்ளது. இவர்களது திருமணத்தை அறிந்த நெட்டிசன்கள், இந்த தம்பதியினருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.