தொடர் படுதோல்விகள்: இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு!

உலகக் கோப்பை தொடரில் தொடர் தோல்வியை அடுத்து இலங்கை அணியின் கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டுள்ளது.

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இலங்கை அணி விளையாடிய 7 போட்டிகளில் 2 மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து 302 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

இந்த தொடர் மோசமான தோல்விகள் குறித்து இலங்கை கிரிக்கெட் அணி பயிற்சியாளர், கேப்டன் மற்றும் அணி நிர்வாகம் ஆகியோரிடம் இலங்கை கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டு வருகிறது.

இந்நிலையில் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி மோசமான தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு அதிரடியாக கலைத்துள்ளது.

மேலும் அதற்கு மாற்றாக 1996ம் ஆண்டு உலக கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜூன ரணதுங்கா தலைமையில், ஓய்வு பெற்ற நீதிபதிகளை உள்ளடக்கிய இடைக்கால குழு அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News