Connect with us

Raj News Tamil

சேது படத்தின் ஒட்டுமொத்த வசூல் எவ்வளவு?

சினிமா

சேது படத்தின் ஒட்டுமொத்த வசூல் எவ்வளவு?

என்னதான் பல்வேறு படங்களில் நடிகர் விக்ரம் நடித்திருந்தாலும், அவருக்கு முதன்முதலில் அங்கீகாரத்தை பெற்றுத் தந்த திரைப்படம் சேது தான்.

இயக்குநர் பாலா அறிமுகமாகியிருந்த இந்த திரைப்படம், அன்றைய காலகட்டத்தில், விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

இவ்வாறு இருக்க, இன்றோடு இந்த திரைப்படம் வெளியாகி, 24 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நாளில், இப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.

அதாவது, ரூ.40 லட்சத்தில் எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், உலகம் முழுவதும் 15 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top