சீன அதிபர் ஜி ஜின்பிங், தனிப்பட்டநேர்மையை பேணுமாறு சமீபத்தில் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். அதன் பிறகு, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக லஞ்சம் கொடுப்பவர்களையும் தண்டிக்கும் படி குற்றவியல் சட்டத்தை திருத்தி அமைத்தது சீன அரசு.
இந்த புதிய குற்றவியல் சட்டத் திருத்தம் சீனாவின் உயர்மட்ட சட்டமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) நிலைக்குழுவால் நிறைவேற்றப்பட்டது. மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வரும் இந்த சட்டப்படி, நிர்வாகம், நீதித்துறை ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுப்பவர்கள் மற்றும் நிதி, சுகாதாரம், உணவு, கல்வி போன்ற துறைகளில் லஞ்சம் கொடுப்பவர்களுக்கும், கடுமையான தண்டனை வழங்கப்பட உள்ளது.
சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் பதவியேற்ற 2012ம் ஆண்டு முதல், ஊழலுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கட்சி நிர்வாகிகளின் உறவினர்கள் பெயர்கள், ஊழல் விவகாரத்தில் அடிபடக்கூடாது என்றும் ஜி ஜின்பிங் எச்சரித்துள்ளார்.