சித்திரை திருவிழாவின் போது மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில் கள்ளழகர் இறங்கக்கூடிய ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள வைகை ஆற்றங்கரையோரம் மீண்டும் கழிவு நீர் கலக்கப்பட்டுள்ளது.
சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினால், கள்ளழகர் இறங்கக்கூடிய இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசி மீண்டும் வைகை ஆற்றோடு கழிவுநீர் கலக்கப்படுகின்றது.
சித்திரைத் திருவிழா நடைபெற இன்னும் 40 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.