உலகின் பல்வேறு நாடுகளில், உடலுறவு குறித்து பொது வெளியில் பேசுவது, தீண்டத்தகாத விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், சமீப காலங்களாக, இதுதொடர்பான விழிப்புணர்வு, பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில், இதுகுறித்து பொதுமக்கள் போதிய விழிப்புணர்வுடன் தான் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக உள்ள ஸ்வீடன் நாட்டில், செக்ஸை ஒரு விளையாட்டாக அனுமதித்துள்ளது.
மேலும், இதற்காக பிரத்யேக சாம்பியன்ஷிப் போட்டிகளும் நடத்துவதற்கு, அந்நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே, ஸ்வீடன் நாட்டில் தான், முதன்முறையாக, இதுமாதிரியான போட்டிகளுக்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 8-ஆம் தேதி அன்று நடைபெற உள்ள இந்த போட்டிகள், 6 வாரங்களுக்கு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துணையை கவர்தல், உடல் மசாஜ், வாய்வழி உடலுறவு, சகிப்புத்தன்மை என்று 16 பிரிவுகளில், இந்த போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டியின் முடிவுகள், பார்வையாளர்களிடம் இருந்து 70 சதவீதமும், நடுவர்களிடம் இருந்து 30 சதவீதமும், பெறப்பட்டு, அறிவிக்கப்பட உள்ளன. இதுவரை, இந்த போட்டியில் பங்கேற்க, 20 பேர் விண்ணப்பித்துள்ளனர்.