“Sex Education : Final Season” – இன்று முதல் வெளியாகும் இணையத் தொடர்! இந்தியாவில் எப்போது ரிலீஸ்?

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில், கடந்த 2019-ஆம் ஆண்டு அன்று வெளியான வெப் தொடர் தான் செக் எடியுகேஷன். பெரும் வெற்றியை பெற்ற இந்த தொடரின் 2-வது சீசன் 2020-ஆம் ஆண்டும், 3-வது சீசன் 2021-ஆம் ஆண்டும் வெளியானது.

இளைஞர்கள் பாலியல் தொடர்பான விவகாரங்களை எவ்வாறு தவறாக புரிந்துக் கொள்கிறார்கள், அந்த வயதில் அவர்களுக்கு ஏற்படும் காதல், பெற்றோர்கள் பாலியல் கல்வியை எவ்வாறு வழங்க வேண்டும், பள்ளிகள் மாணவர்களை எவ்வாறு உருவாக்க நினைக்கிறது, ஆனால் மாணவர்கள் எப்படி உருவாக நினைக்கிறார்கள் என்று பல்வேறு முக்கிய உரையாடல்களை பேசிய இந்த தொடர், பெரும் வெற்றியை பெற்றிருந்தது.

இந்நிலையில், இந்த தொடரின் கடைசி மற்றும் 4-வது சீசன், இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மாதிரியான நேரங்களில் இந்த வெப் தொடர் வெளியாக உள்ளதாம்.

இந்தியாவை பொறுத்தவரை, இன்று மதியம் 1.30 மணிக்கு, இந்த தொடர் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாம்.

ஆங்கில மொழியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடர், இந்திய மொழிகளான, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும், டப்பிங் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News