“பிணத்துடன் உடலுறவு கொள்வது குற்றம் இல்லை” – நீதிபதிகளின் அதிர்ச்சி தீர்ப்பு!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர், இளம்பெண் ஒருவரை கொலை செய்தார். பின்னர், அந்த பெண்ணின் உடல் உடன், அந்த இளைஞர் உடலுறவு வைத்துக் கொண்டார். கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம், கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த நீதிமன்றம், அந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கியது. கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், பிணத்துடன் உடலுறவு கொண்டதற்காக, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பு குறித்து, இளைஞர் தரப்பு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை தற்போது விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், நேற்று தங்களது தீர்ப்பை வழங்கினர்.

அதில், கொலை செய்தததற்காக கொடுக்கப்பட்ட ஆயுள் தண்டனை செல்லும் என்றும், பிணத்துடன் உடலுறவு கொண்டதற்காக கொடுக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை செல்லாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அத்துடன், இறந்துபோன ஒருவரின் உடலுடன் உறவு கொள்வதை குற்றம் என்பதை உறுதி செய்ய இந்திய தண்டனை சட்டத்தில் இடம் வேண்டும் அல்லது புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த தீர்ப்பு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் இது சட்ட ஆராய்தலுக்கு உட்பட்டது என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News