திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆஞ்சநேயர் நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக செங்கல்வராயன் (59) பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை தலைமை ஆசிரியர் செங்கவல்ராயன் பள்ளி கழிவறையில் வைத்து பாலியல் துன்புரத்தல் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் சலசலப்பு ஏற்படுத்தியது. தனக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
மேலும் இதுதொடர்பாக சிறுமியின் தாய் பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் செங்கவல்ராயனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.