சாகுந்தலம் படம் மிக மோசமான தோல்வியை தழுவியதால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான சாகுந்தலம் திரைப்படம், கடந்த 14ம் தேதி வெளியானது. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது.

சுமார் 80 கோடி பட்ஜெட்டில் உருவான சாகுந்தலம், முதல் வாரம் முடிவில் 10 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. திரையரங்குகளில் மட்டும் 20 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்துள்ளதாக சாகுந்தலம் படத்தின் தயாரிப்பாளர், திரையரங்க விநியோகஸ்தர்கள் புலம்பி வருகின்றனர்.