குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தெலுங்கில் தயாரிக்கப்பட்ட இப்படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
சுமார் 70 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் வெறும் 10 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது. தெலுங்கில் மட்டும் 5 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான சமந்தா நடித்த இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைக்காதது தெலுங்குத் திரையுலகினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமந்தா தற்போது ‘குஷி’ என்ற தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொன்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.