Connect with us

Raj News Tamil

லோகேஷ் ஆசையை நிறைவேற்றும் ஷாருக்கான்..?

சினிமா

லோகேஷ் ஆசையை நிறைவேற்றும் ஷாருக்கான்..?

அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஷாருக்கான், கனகராஜை டேக் செய்து, ஜவான் படத்தை பார்த்து கமெண்ட் சொல்லுங்கள் என்றும் லியோ படத்திற்காக வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், லோகேஷ் கனகராஜ், ‘ஜவான் படத்தை பார்க்க ஏற்கனவே திட்டமிட்டுள்ளேன்; ‘லியோ’ வெளியானவுடன், படத்தை உங்களுடன் சேர்ந்து பார்க்க விரும்புகிறேன்’ என தனது விருப்பத்தை பதிவிட்டுள்ளார்.

இவர்களது இந்த ட்விட்டர் உரையாடல், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More in சினிமா

To Top