Connect with us

Raj News Tamil

லியோ திரைப்படத்திற்காக காத்திருக்கும் ஷாருக்கான்..!

சினிமா

லியோ திரைப்படத்திற்காக காத்திருக்கும் ஷாருக்கான்..!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இதனால் படக்குழுவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

இந்நிலையில், விஜய் சோசியல் டீம் என்ற சமூக வலைதள பக்கத்திலிருந்து படக்குழுவுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஷாருக்கான் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.. தளபதியின் அடுத்த படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!! ஐ லவ் விஜய் சார்!! ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வெளியான பதான் மற்றும் ஜவான் திரைப்படம் ஷாருக்கானுக்கு மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top