காவி உடை சர்ச்சை : ஷாருக்கானின் பதான் படத்துக்கு தடையா..?

ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் படம் பதான். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கும் இப்படத்தின், முதல் பாடல் பேஷரம் ரங் சில தினங்களுக்கு முன் வெளியானது. அதில் தீபிகா அணிந்திருந்த காவி நிற பிகினி நாடுமுழுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

cinema news in tamil

மேலும் இந்து மத நம்பிக்கையை அவமதித்து விட்டதாக கூறி, பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேசம் மற்றும் பீகாரில் இப்படத்துக்கு எதிரான போராட்டம் வலுத்துள்ளதால் பதான் படத்துக்கு தடைவிதிக்கப்படலாம் என்று இந்தி திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.